காத்திருப்பேன் காலமும்

தங்கத் துகள்களாக மினுமினுக்கும்
பாலைவன மேற்பரப்பாய்
அங்கமெலாம் ஊடுருவி
இதயத்தில் தஞ்சமடைந்து
மின்மினி பூச்சிகளாய்
என்னுயிருள் கலந்துவிட்ட
எழிலார்ந்த நாயகியே
கவின்மிகு காதலியே
நொடிகள் யுகமாகிறது
நாடித் துடிப்பு கூடுகிறது
உன்னைக் காணாது !
உன் பெயரை உச்சரிக்கும்
உதடுகள் உலர்ந்து போனது !

நாம் சந்தித்த இடங்களில்
தேடுகிறேன் ஓடுகிறேன்
பித்தனாக !
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகின்ற
பூக்களைப் போல உள்ளம்
வாடி நீரற்ற கேணியானது !

எங்கே சென்றாய் எந்நிலவே
இடம் பெயர்ந்து
முகவரி மாறினாலும்
என் இதயத்தில்
நிலைத்து வாழ்கிறாய் !
திக்குத் தெரியாத வனத்தில்
சிக்கித் தவிக்கும் ஒருவனாக
நிற்கிறேன் நிர்க்கதியாக !

திரும்பி வா விரைந்து வா
உன் நிழலைக் கண்டதுமே
என் இதயம் குளிர்ந்திடும் !
உன் திருமுகம் பார்க்காமல்
என் முகமே மறந்து போனது
காத்திருப்பேன் காலமும் !


பழனி குமார்
22.06.2023

எழுதியவர் : பழனி குமார் (23-Jun-23, 8:04 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 124

மேலே