நவீன உடன்கட்டயை உடை

நவீன உடன்கட்டயை உடை
××××××××××××××××××××××
பிறப்பில் கைம்பெண்ணல்ல பூத்தபோது விதவையில்லை
இடையில் வந்தவன் இறந்து விட்டால்
வண்ண ஆடை பறித்து வெண்ணாடை அணியாவிட்டால்
கருமேகம் மழை  தரவும் மறுக்குமோ

வளையல் பூவூம் விதவை சூடினால்
சுழலும் பூமியும் சுற்றிடத் தயங்குமோ
குங்குமம் சந்தனம் கைம்பெண் நெற்றியை
அலங்கரித்திட சந்திரன் சூரியன் உதியாதோ

மூடர்களே திருந்துங்கள் மாங்கல்யம் துறந்தாலும்
மங்கைதான் துறவியல்ல மாறுங்கள் மாற்றுங்கள்
சடங்குகளை வேரறுத்து சட்டமாக ஏற்றிடுவோம்
மூடநம்பிக்கையை கருவறுத்து பகுத்தறிவுக்கு பாதையிட்டு

கைம்பெண் விதவையென சொல் வேண்டாம்
திருவை இழந்தாலும் திருமதிதானே அவள்
திருமகளாக மங்ககரமாக இறப்பு வரை
பூ பொட்டு வளை அணியட்டும்..

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (25-Jun-23, 3:02 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 22

மேலே