கிருபானந்த வாரியார் சிவக்குமார் கலைஞர்

நேரிசை வெண்பாக்கள்

1).
நடிகராயி னென்னவாம் நம்சிவக்கு மாரும்
படித்தரா மாயணப் பாட்டும் -- கடினம்
படித்து மனனமாம் பாராட்டல் செய்வாய்
நடிப்பல்ல உண்மையை நாடு

2)

தமிழிலக்கி யத்தை தமிழுயர்த்தும் பொய்யர்
துமியுமதை ஒப்பிக்கார் தூதூ -- தமிழில்
புலியென் றவரும் புகலசேர்க்கார் சான்றோர்
நலிவோமென் றச்சம் நவிலு

குறள் வெண்பா

கலைஞரொப் பிக்கார் கலையிலக்கி யத்தை
கலைஞனை ஏறவிடார் காண்

,,,,,,,,

எழுதியவர் : பழனி ராஜன் (26-Jun-23, 2:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே