கவிதை எழுதலாம் வாங்க
கவிதை........!
நயமும் சுவையும் கலந்து
பொருளும் புரிதலும் இணைந்த வரிகளாக வடிக்கலாம் !
எதுகை மோனை இருகரம்
கோர்த்த பாமாலை எழுதலாம் !
எளிமை தமிழில்
உவமை உள்ளடக்கிய
இனிமையான வரிகள்
இன்பம் தரும் வகையில்
புதுக்கவிதை புனையலாம் !
இலக்கிய நடை இல்லாத
இன்பம் பயக்கும் முறையில்
வாசிப்பவர் மயங்கிடும் வார்த்தை ஜாலமுடன்
வரிகளை செதுக்கலாம் !
தற்கால சூழலை அக்கால நிகழ்வுடன் ஒப்பாக அமைத்து
அழகிய தமிழில் எழுதலாம் !
கவிதை வடிப்பது கடினமான
சூத்திரம் அல்ல !
மாறாக சிந்தனை ஊற்றை
சிந்தாமல் சிதறாமல் சீர்மிகு
படைப்பாக பகிரலாம் !
காணும் நிகழ்வுகளை
மனதில் நிறுத்தி உள்ளத்தின்
உணர்வுகளை வெளிப்படுத்த
துணிவை துணைகொண்டு
ஒரு துளிக் கவிதை முதல்
பல வரி கவிதையாக வழங்கிட முற்படலாம் !
பழனி குமார்
27.06.2023