கவிதையில் பொய்ப்பூவைத் தூவுவாய்

பூக்கரங்கள் பூசைக்குப் பூப்பறிக்கும் காலையில்
நோக்கும் விழியினில் காதலின் பொன்மாலை
யாக்கும் கவிதையில் பொய்ப்பூவைத் தூவுவாய்
வாக்கின் தமிழ்வசந்த மே

பூக்கரங்கள் பூசைக்குப் பூப்பறிக்கும் காலையில்
நோக்கும் விழியினில் காதலந்தி -- பாக்களில்
யாக்கும் கவிதையில் பொய்ப்பூவைத் தூவுவாய்
வாக்கின் தமிழ்வசந்த மே

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-23, 7:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே