பூச்சரமாய் மாலை காதலின் விழிகளில்

பூச்சர மல்லிகை கூந்தலில் அசைந்தாட
பூச்சர முல்லை புன்னகையாய் இழைந்தோட
பூக்கரங்கள் பூசைக்கு மலர்பறிக்கும் காலையில்
நோக்கும் விழியில் காதலின் மாலை
பூச்சர மல்லிகை கூந்தலில் அசைந்தாட
பூச்சர முல்லை புன்னகையாய் இழைந்தோட
பூச்சரம் தொடுக்க பூப்பறிக்கும் காலையில்
பூச்சரமாய் மாலை காதலின் விழிகளில்
பூச்சர மல்லிகை கூந்தலில் ஆடிட
பூச்சர முல்லையும் புன்னகை யாய்மலர
பூச்சரம் நீதொடுக்க பூப்பறிக்கும் காலையில்
பூச்சரம்போல் காதல் விழி