சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்

உலக வரைப்படங்களின் கோடுகள் எல்லாம் அளக்க தெரிந்த நமக்கு

ஓர் உழவனின் கை ரேகை கோடுகள் மட்டும் தெரியாமல் போனது என்ன விந்தை!
இணையத்தில் நாம் கூடி இன்பம் வளர்த்தெடுக்கலாம்

ஆனால்

தானியத்தை எங்கே நாம் தரவிறக்கம் செய்வது?


மண்ணை முத்தமிட்டு

மழைக்கு தூதுவிட்டு

காற்றுக்கு அணையிட்டு

கதிருக்கு வேலியிட்டு

பெண்ணை வளர்ப்பது போல்

பெருங்சிரமம் தான் பட்டு

உலகம் உயிர்த்தோங்க உணவை தருகின்ற

விவசாயி கண் கண்ட தெய்வம் தான்.

கனிம வளம் வேண்டுமென்றால்

களங்கள் நூறு இங்கு உண்டு.

காவிரி படுகை மட்டும் விட்டுவிடுங்கள் என்று

கண்ணீர் மல்க கேட்கின்றோம்.

விளை நிலங்கள் விலை போனால்

நிலை என்ன ஆகும் என்று உணருவீரோ நீர் இன்று

மன்றாடி மன்றாடி மறித்து போன மனதுக்கு

மானியம் தருகின்ற மனிதாபிமானத்தை என்னென்று தான் உரைக்க

ஆறாத ரணம் கொண்டு அழுகின்ற

எம் இனத்தாரின் ஈரக்குரல் கேட்டு

அரசாங்கம் தருகின்ற நிவாரணம் எல்லாம் சாதாரணம்.


சோழ நாடு சோறுடைத்து என்று

சொல்லி வந்த பழங்கதை மாறி

தன் சோறு கேள்வி குறி ஆனதை சொல்லவே வெட்குகின்றார்.

என்றாலும்

செங்சோற்று கடன் தீர்க்க

செய்தொழிலை மறவாது இன்னமும் செய்கின்றார்.


உலகம் வாழ

உழவு தொழில் மீள வேண்டும்

உழவன் என்றும் ஆள வேண்டும்.

எழுதியவர் : நா தியாகராஜன் (2-Jul-23, 1:59 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 92

மேலே