வினை விதைத்தவன்
வினை விதைத்தவன்
`````````````````````````````````
மனிதன் செய்திட்ட
பாவத்தை போக்கிட/
மாவினத்தை உயிர்ப்
பலி கொடுத்தான்/
மனிதமற்றச் செயலாக
வினை விதைத்த/
மனிதனுக்கு விலங்கின்
கொடையாக நோய்கள்/
ஆடிய ஆட்டம்
பூமிக்கு பிடிக்கவில்லை/
ஆண்டவனும் கைவிட்டான் நுண்கிருமிகளை அனுப்பிவைத்தான் /
நிலாவை தொட்ட
மனித இனம்/
நேர்கண்ட மனிதனை
கைகுலுக்க முடியவில்லை/
மிருகங்களை கூண்டிட்டு
வித்தை காட்டிய/
மனிதன் கூண்டோடு
கூண்டிற்குள் சிறை /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்