இதழின் சிரிப்பு

இதழின் சிரிப்பு

வண்ண இதழ்கள்
வளைவு வளைவாய்
இணைந்து
இளநகை புரிகிறது

அதை
தாங்கி பிடிக்கும்
காம்பின் இடையில்
காவல் இருக்கும்
முட்கள்

அழகியின் அருகில்
“செல்பி”
எடுத்து கொள்ளும்
ஆவலாய்
அருகருகே ஒட்டியபடி
பச்சை இலைகள்

இவ்வளவு புகழ்
இருக்கும்போது

இந்த ரோஜா
மலர்
இள நகை
புரியாமல்
என்ன செய்யும்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Jun-23, 9:36 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ithazhin sirippu
பார்வை : 140

மேலே