கொடுக்கப்படாத கடிதம்
உனக்காக ஓலை எழுதி
உசுருக்குள்ள வச்சுருக்கேன்
உசுருக்குள்ள உள்ளதெல்லாம்
உத்தமனே உன் நெனப்பு
வாய்மொழி சொல்லி விளங்க வைக்க
வார்த்தை இல்லை எங்கிட்ட
ஒரு வாட்டி ஒரே ஒரு வாட்டி
ஏ உசுருக்குள்ள வந்து படிச்சுட்டு போ
போவியா சாத்தியமா
போகமாட்ட ....