புன்னகைக்கும் தேவி
தென்றல்நீ சொந்தமென்று கொண்டாடும் கூந்தலும்
தென்ன மிளங்கீற்று பூந்தளிர் மேனியும்
பொன்னெழில் காலையில் பூக்கும் மலரோடு
புன்னகைக்கும் தேவியென்சொந் தம்
தென்றல்நீ சொந்தமென்று கொண்டாடும் கூந்தலும்
தென்ன மிளங்கீற் றுமேனியும்-- மின்விழியும்
பொன்னெழில் காலையில் பூக்கும் மலரோடு
புன்னகைக்கும் தேவியென்சொந் தம்