என்குளிர் நிலவு நீதானே

என்னருகே நீ இருந்தால் அன்பே
நீ தானே என் குளிர் நிலவு
என் குளிர் நிலவு நீதானே
நீ இருக்கும் ஒவ்வோர் கணமும்
என்னுள் அலை அலையைத்
தோன்றுதே ஆயிரம் இன்பக் கனவு
ஒரு கணம் நீ இல்லாது போனாலோ
அவை அத்தனையும் அலைமேல்
அழியும் நீர்க்க குமிழிகள் ஆகுதே
ஆம் அன்பே கலைந்து போகுதே
என்னைத் தனிமையில் வாட்டி போகாதே
கரையில் வாடி துடிக்கும் மீன்போல ,
என்னை விட்டு ஒரு கணமும்
போய்விடாதே என் அன்பே
உனக்காகவே உயிர் வாழும்
பேதை நான் நீரில்லாது மீன் வாழாது
நீ இல்லாது நானும் வாழேன்

என்னருகே நீ இருந்தால் அன்பே
என்குளிர் நிலவு நீதானே
உனக்காகவே பூக்கும் அல்லியல்லவோ நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Jul-23, 1:02 am)
பார்வை : 87

மேலே