விரும்பா வகையினில் விதைத்திடும் இலக்கண மீறல் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)

திருந்தாச் சென்மமும் தேடினால் கிடைத்திடும் இங்கு;
பொருந்தாச் சீரினால் புரிந்திடாக் கருத்துமே தந்து
விரும்பா வகையினில் விதைத்திடும் இலக்கண மீறல்
கரும்பாய் இனிக்குமோ கசக்குமோ சொல்லுவீர் இன்றே!

- வ.க.கன்னியப்பன்

(வேறிடத்தில் உள்ள பாடலைப் பார்த்து மனம் வருந்தி...)

கலித்துறை எழுத விழைவோர்க்கு எளிய வாய்பாடு:

(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)

முதலடியில், முதல் சீர் தேமா என்றால் நான்கடிகளிலும் தேமா வர வேண்டும்;

முதலடியில், முதல் சீர் புளிமா என்றால் நான்கடிகளிலும் புளிமா வர வேண்டும்;

இரண்டு, மூன்று, நான்காம் சீர்களில் நான்கடிகளிலும் கூவிளம், கருவிளம் வரலாம்; ஒரே வகை விளமாய் அமைதல் சிறப்பு.

ஐந்தாம் சீர் நான்கடிகளிலும் இருவகை மாச்சீர்களும் வரலாம். ஒரே வகை மாச்சீர் அமைதல் சிறப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-23, 3:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே