இமயம் போலவே இயம்பிட உயர்வுமே உண்டே - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)

தமிழில் இனிதெனத் தரமுள பாக்களும் கண்டேன்;
அமிழ்தை மிஞ்சிடும் அருமையாங் கவிகளும் கண்டேன்!
அமைந்த பாவினில் அழகுறச் சேதியும் கண்டேன்;
இமயம் போலவே இயம்பிட உயர்வுமே உண்டே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-23, 10:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே