கண்ணன் கீதம்-- ஆடை அபகரித்தல்

நாங்கள் குளித்து கரைசேரும் முன்னே
எங்கள் ஆடைகளெல்லாம் கரையிலிருந்து
எடுத்து மறைத்து வைத்துள்ளாய்க் கள்ளனே
கண்ணனே எங்கள் மனம் கவர்ந்தவனே
நந்தன் கொழுந்தே யசோதை இளஞ்சிங்கமே

இனிநாங்கள் கரை சேருவது எவ்வாறு
நீயே சொல்வாய் நந்த லாலா
எங்கள் ஆடையை திரும்பி தந்துவிடு
எங்கள் மானம் காப்பாய் தோழனே
எங்கள் உயிர்க் காப்போனே நாயகனே
ஒப்பிலா அழகுடையாய் எங்கள் கண்ணா
எங்கள் பிள்ளை பெருமானே
இந்த மேதினியில் நீயன்றி எங்களுக்கு
கதி யாருளர் நீயறியாயோ காயாம்பூவண்ணா
இன்று ஏன் இந்த விளையாட்டுனுக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Jul-23, 12:01 am)
பார்வை : 37

மேலே