பழைய ராகம்புதிய பாடல்

"பழைய ராகம்....புதிய பாடல்"..
பழைய ராகம் : ஒரு பொன்மானை நான் காண...தகதிமிதோம்...
பல்லவி
---------------

கரு விழியாலை என்னை ஈர்த்த தேவதையோ
சிறு இடையழகில் மயக்கிடும் மயிலாளோ
அழகில் மயங்கினேன் கேளு காதலில் விழுந்தேன் கேடு
அழகில் மயங்கினேன் கேளு காதலில்
விழுந்தேன் கேடு
அவளை நினைத்து தன்னை மறந்தேன்
நினைவால் இரவுகள் பல தொலைத்தேன்
(கரு விழிவிழியாலை)

சரணம் 1

மண்ணில் வந்த ஒற்றை நிலவாக உன்னை
எனக்காக அத்தை பெற்றாளோ
செவ்வந்தி பூவாக பூத்த பருவ பெண்ணாக
மற்றவர்கள் கண்ணில் படாமல் எனக்காக
மண்ணில் பிறந்தவள் நீ தானே
ஆதலால் உன்னை சரனடைந்தேன்
இதயத்தில் நுழைந்து குருதியில்
கலந்தவளே இவள் தானே
சிவனும் சக்தியாக ஈருடல் ஓருயிராக கலந்து
நாளும் ஊர் போற்ற வாழ்வோமே
உலகம் முழுவதும் காதலை போற்ற வாழ்வோமே
(கரு விழியாலை)

சரணம் 2
-----------------

கதிரவன் கண் சிமிட்ட தடாகத்தில்
தாமரை மலர்வது இயற்கையான காதல்தான்
மனிதனுக்கும் சொர்க்கத்தில் நிச்சயக்க பட்ட
பூமியில் காதலராவதும் இயற்கையான காதல்தான்
சாதி பிரிவினரால் காதலர்களை பிரிப்பது முறையோ
சாதியை எரித்து காதலில் வெல்வோம்
கலப்பு திருமணம் செய்வோம்
காதலால் தான் சாதி அழியும்
உயர்ந்தோர் தாழ்ந்தவன் ஏழைகள் பார்க்காது காதல்
வேற்றுமை அற்று ஒற்றுமையாக்க
இந்த மண்ணில் காதல்தான் வலுசேர்த்திடும் (2)
(கரு விழியாலை)..

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Jul-23, 5:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 36

மேலே