செண்பக பூ வாசம் மச்சான் உன் வாசம்

செண்பக பூ வாசம் மச்சான் உன் வாசம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

காம்புகள் தாங்கிட
கவர்ந்திடும் ரோசாவாக
கண்ணால் மின்னலாக
காதலில் சாய்த்தாயே

கனகாம்பரைப் பூவாக
கன்னி நான்
கார்த்திகையில் பூத்து
காத்திருக்கேன் மச்சானே

கண்டாங்கிச் சேலைகெட்டி
கொண்டையில் பூச்சூடி
குல தெய்வம்
காளியாகத் தாலியுடன்

கற்சிலையாக அசையாமல்
கரையில் காத்திருக்கேன்
கூடுவரும் சோடிக்
கிளியை தேடிவருவதாக

காதலி என்னை
கைப் பிடித்து
காளையனே தாலி
கெட்டி மனைவியாக்கு

செண்பக பூ
வாசம் மச்சான்
உன் வாசம்
என் வசம்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Jul-23, 6:01 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 36

மேலே