நல்லமழை பெய்தாலே நாடுநலம் பெருகுமையா - கலிவிருத்தம்
(கூவிளங்காய் / காய் 3)
(1, 3 சீர்களில் மோனை)
நல்லமழை பெய்தாலே நாடுநலம் பெருகுமையா;
தொல்லுலகில் யாவருமே துணையிருப்பர் எளியோர்க்கு!
வல்லரசே என்பதெல்லாம் வகையாக ஆளுவதே;
செல்லுபடி யாகிடுமோ சிந்தையெலாம் மகிழ்வதற்கே!
- வ.க.கன்னியப்பன்