மனக்குருடு
மனக்குருடு
××××××××××
தெருவோடுத் திருவோடு யேந்திப் பசியோடு
இருப்போரைக் கண்டும் காணதுச் சென்றே
கருவறையோடுத் தங்க மேனியோடுப் பசியின்றி
உருகொண்ட கல்லுக்கு வைடுரியம் உபயமேனோ..
ரத்ததானம் செய்யாது நலம் வேண்டி
ரதவடம் பிடிக்க நோயும் அண்டாதோ
ஆயுள்வேண்டி ஆண்டவனுக்கு கிரீடம் சூட்டியே
தலைக்கவசம் அணியாதப் பயணம் நீளுமோ
பொய் பேசிப் பேயாகச் சதிசெய்து
மெய் யானவனாய் நித்தம் சாமிக்கே
நெய்யால் அபிசேகம் நற் பலனோ
வாய்மையே வெல்லும் மனக்குருடுத் தோல்வியே..
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்