நன்றிகெட்டு நாடகமாடும் நரிகள்

நன்றிகெட்டு நாடகமாடும் நரிகள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

குடிகெடுக்க மதுதந்து
குடிவீழ்ந்த மக்களுக்கு/
கோடியில் நலத்திட்டம்
கொண்டுவந்து பயனென்ன?

வழிபடும் ஆலயத்தினுள்
வழியெங்கும் உண்டியல்/
வழிந்தோடும் சில்லறையில்
வழியற்றோரக்கு அன்னதானமாம்/

விளைகின்ற நெல்மணியை
விலையற்று வாங்கியே/
விலையில்லா அரிசியாக
வறுமைக்கு கொடுப்பதா/

சாதியால் பிரித்தெடுத்து
சாதியெனும் சான்றுதந்து/
சமத்துவமும் சமூகநீதியும்
சந்தர்ப்பவாதியால் நிகழுமா?/

தன்னலமற்ற அரசியல்வாதியென
தலைவனாக அனுப்பிடவே/
நன்றிகெட்டு நாடகமாடும்
நரிகள் திருந்துமா?/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Jul-23, 5:47 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 40

மேலே