சாதி
சாதி
××××××
தொழிலால் கருவாகி
மதத்தால் பிறந்தது சாதி
அரசியலில் வளர்ந்து
கூத்தாடியால் வாழ்கிறது சாதி
தமிழர் குலத்தைக்
குவளையால் பிரித்தது சாதி
தீண்டாமைத் தீயைப்
பற்ற வைத்தது சா(தீ)க்குச்சி
மனிதக் கழிவை
மனிதனை அகற்ற செய்தாது சாதி
அன்பால் இணைந்தவனை
ஆணவத்தால் சாவடித்தது சாதி
ஓதுபவனையும் ஓதுக்கப்பட்டவனையும்
ஒன்றாக இணைத்த சமத்துவத் தலைவன்
ஐயா பசும்பொன்னார் போன்றவரை
சாதிய தலைவனாக மாற்றியது சாதி
தமிழினம் தோலாக
வெளியே தெரியட்டும்
எழும்பாகச் சாதி
அதனுள் மறையட்டும்...
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்