விருப்பம் போல் செப்பிடக் கலித்துறை ஆமோ - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
ஐந்து சீருடன் அங்கங்கே பிரித்துமே ஆக்கிச்
செய்து பாவினைச் செப்பிடக் கலித்துறை ஆமோ?
மெய்யாய்ச் சீருமே மேன்மையாய் அமைந்திட மேவும்
பொய்யி லாவகைப் பொங்கிடும் செய்யுளே ஆங்கு!
- வ.க.கன்னியப்பன்