1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

'80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..

டமார்..டமார்..தெருவோரம் தண்டாரோ சத்தத்துடன் ஒரு குரல் " சகலமும் நிறைந்த மேலக்கலங்கல் ஊர் மக்களுக்கு ஊர் நாட்டாமைகள் அறிவிப்பு, ஊர் அம்மன் கோவில் பொங்கலுக்கான ஊர் கூட்டம் போடுறாங்க சாமியோ...இரவு எட்டு மணிக்கு எல்லோரும் கலந்துக்கோங்க சாமியோ " டமார்..டமார்...

கோவில் கொடை விழா நடப்பதற்கு முன் ஊர்க்கூட்டம் போடுவாங்க..அந்த ஊர்க் கூட்டத்தில்தான் கோவில் திருவிழா தேதி குறிக்கப்பட்டு ..செலவுகள் எவ்வளவு ஆகும் வரவுக்கு திருவிழா வரியாக குடும்பத்திற்கு எவ்வளவு போட வேண்டுமென்று நிர்ணயம் செய்வார்கள்..

பொங்கல் நிகழ்ச்சி நிரல் தயரிக்கப்படும்..ஒலி ஓளி அமைப்பு,பந்தல் அமைப்பு,நையான்டி மேளம் ,கரகாட்டம்,வில்லுப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரை அழைப்பபது ..போன்ற தகவல்கள் திரட்டப்படும்..

தண்டாரோ அடித்து அம்மன் கோவில் திருவிழாவின் தேதியை பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்..

பின்னர் அம்மன் கோவில்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு

குறித்த தேதியில் அம்மனுக்கு முதல் நாளில் பொங்கல் சாட்டப்பட்டு 10 நாள் விழவாக நிகழும்..

10 நாட்களும் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்வுகளை ஊராரால் நியமிக்கப்பட்ட கோவில் பூசாரிகள் செய்வார்கள்..

பூசைகள் நிறைவுற்றவுடன் அபிஷேக விபூதி ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும்.

தொடரும்.....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Jul-23, 5:50 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே