அனுசரி வாழ்வினி லன்புங் கூடுமே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

இனிதென வெண்ணினே னின்பம் மேவிட,
கனியெனக் கனிந்தது காதல் மீக்குற,
பனியெனக் குளிர்ந்தது பாச மோங்கிட,
அனுசரி வாழ்வினி லன்புங் கூடுமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-23, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே