பரதன் தயரதனை நினைத்து முன்னிலைப்படுத்தி அரற்றுதல் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
அறம்தனை வேரறுத்(து), அருளைக் கொன்றனை,
சிறந்தநின் தண்ணளித் திருவைத் தேசழித்(து),
இறந்தனை ஆமெனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கிதின் மாசு மேலுண்டோ? 48
,
- பள்ளிபடைப் படலம், அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்
எளிமையான இந்த வாய்பாட்டில் தகுந்த எதுகை, மோனையோடு, (1, 3 சீரில்) பொழிப்பு மோனையும் வைத்து, ஒரு கலிவிருத்தம் எழுதுங்களேன்.
முதல் சீர் முதலடியில் கூவிளம் என்றால் நான்கடிகளிலும் கூவிளம்,
முதல் சீர் முதலடியில் கருவிளம் என்றால் நான்கடிகளிலும் கருவிளம்!,