ஆக நேரிலே ஆவலாய் வந்தனள் - கலிவிருத்தம்
ஆக நேரிலே ஆவலாய் வந்தனள்!
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
மோக ராகமோ மோகன ராகமோ?
ஆகு மென்றவ ளாசைகொள் பேச்சினை
ஓகை கொண்டவ ளொன்றியே கேட்டதும்
ஆக நேரிலே ஆவலாய் வந்தனள்!
- வ.க.கன்னியப்பன்

