தேநீர் நினைவுகள்

தேநீர் நினைவுகள்
×××××××××××××××××
சூரியோதயம் முன்னே
சுப்ரபாதம் ஒலிக்க
கரியடுப்பில் தேநீர்
கமகமக்கும் கடைகளிலே

கலப்படமில்லா சாதிக்கோர்
குவளைகள் தனித்திருக்க
கலப்படமாகும் நீர்
கலந்தப் பாலும்

சாயமேற்றிய வெந்நிரும்
சமமாக நிறைந்திருக்க
தீண்டாமைச் சூடு
வாயைப் பதம்பாக்குமே

கசப்பான நினைவுகளை
கனவாக நினைத்தே
பாசமாக உறவாகப்
பழகி வாழ்கிறோம்

ஒன்றுபட்டக் கோப்பையில்
வேறுபட்ட  நிறமேற்றி
இனவெறியைத் தூண்டாதீர்
இழிசெயல் கூத்தாடிகளே

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Jul-23, 6:23 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 59

மேலே