பகிர்வோம்
பகிர்வு, நமது பாரம்பரிய பழக்கம்//
பகிர்வு உதயமாகிறது கருவறையில் //
தாய் தந்தை உடன்பிறப்பு பகிர்ந்தனர்//
அன்போடு அன்னத்தையும் நம்
நலம் நாடி //
பள்ளியில் ஆசான் அறிவை பகிர்ந்தார்//
நம் மதியின் உயர்வு விரும்பி //
பணி, பணம், பண்பு பகிரப்பட்டது //
நீர், நிலம், காற்று அனைத்தும்//
இயற்கையால் பகிரப்பட்டது இறையன்போடு//
பலரின் பகிர்தலால், பெற்றதால் //
பகட்டாக பயணிக்கிறோம் வாழ்க்கையில்//
நம்மிடமிருப்பது சிறிதாகினும்//
பகிர்ந்து கொள்வோம் இல்லாதோருடன் //
பகிர்ந்து கொடுப்போம் பகிர்ந்து உண்போம் //
சிறிய பகிர்வு பொருளாதாரத்தில்//
சம நிலை ஏற்படுத்தாவிடினும் விடினும்//
ஏழ்மையை போக்காவிடினும்//
வறுமையை முழுதுமாய் நீக்காவிடினும் //
பகிர்வு, மன நிலையில் மகிழ்வை ஏற்படுத்தும் //
ஆன்மாவில் அன்பின் அதிர்வை ஏற்படுத்தும் //
மனிதநேயத்தோடு இருப்பதை பகிர்வோம்//
இறையன்போடு புன்னகையை பகிர்வோம்//