சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 9
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 9
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அம்பிகையின் அருள்ட்சொருபம்
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
தட்சன் பிரசுதி
தம்பதிகளுக்குப் பிறந்தவள்
தாட்சாயினிச் சிவனை
தகப்பனார் விரும்பாமல்
திருமணம் செயதிடவே
கேரள மாநிலத்தில்
கண்ணூரின் கோட்டியூரில்
தட்சன் செய்த மகா வேள்விக்கு
தாட்சாயினினையும் மருமகன் சிவனையும் அழைக்கவில்லை
தந்தையின் பாசத்தால்
தானாகவே வேள்வில்
கலந்தவளை அவமதித்து
சிவனுக்கு கொடுக்க வேண்டிய வேள்வியின்
சிறப்பான அவிர்பாகத்தை தர மறுக்க
யாகத்தில் விழுந்து தேகத்தை அழித்தாள்
யறிந்த சிவனோ யாகத்தையும் தட்சனையும்
ருத்திர அவதாரத்தில் வீழ்த்தி அழித்து
தாட்சாயினி உடலை தன் கையில்
தாங்கிக் கொண்டு தன் நிலை
மறந்த சிவனை மைத்துனன் கண்டிட
மறைந்த தாட்சாயினி
மேனியை சக்கராயுதத்தினால் தகர்த்திட
தாட்சாயினி உடல் சிதறுண்டு
தரணியில் பல இடங்களில்
விழுந்த பாகங்கள் சக்திபீடமாக மக்கள்
வணங்கிட சிவபெருமான் வழி வகுக்க
அம்பிகையின் நெற்றியின் உச்சியில்
ஆயிரம் இதழ் தாமரையான
சஹாஸ்ராம் எனும் பாகம்
சங்கையில் விழுந்து சன்னதியில்
கோமதி அம்பிகையாக அவதரித்தார் ...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்