இதயத் தெருவில் இலக்கியம் சொல்வாய்
இதயத் தெருவில் இலக்கியம் சொல்கிறாய்
உதயசூ ரியன்இளம் கதிர்வீசும் காலையிலே
நதியலைபோல் நெஞ்சம் தழுவிப் பாய்கிறாய்
புதிய பூமலர்போல் சிரிக்கும் புன்னகையில்
இதயத் தெருவில் இலக்கியம் சொல்வாய்
உதய கதிர்கள் ஒளியைப்போல் காலை
நதியலை போல்தழுவி நெஞ்சினில் பாய்வாய்
புதியதாய்ப் பூவாய்ச் சிரி
இதயத் தெருவில் இலக்கியம் சொல்வாய்
உதய கதிர்கள் ஒளியில் - கதிர்போல்
நதியலை போல்தழுவி நெஞ்சினில் பாய்வாய்
புதியதாய்ப் பூவாய்ச் சிரி