உன்மனத்தி லுள்ளதைச்சொல் லோர்ந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)
கண்ணொடு மின்னுங் கயலாட, மின்னுகின்ற
வெண்மேகந் தன்னிலே வீற்றிருக்குந் - தண்மழையோ
வென்னிடஞ் சேதிசொல்ல, வின்பமும் நானடைந்தே
னுன்மனத்தி லுள்ளதைச்சொல் லோர்ந்து!
- வ.க.கன்னியப்பன்