மாவீரன் போல்மார் தட்டுகிறாய் நீ மானிடனே
போவார் வருவதுண்டோ இந்தப் பூமியில்
மாவீரன் போல்மார்தட் டுகிறாய்நீ மானிடா
பூவாரம் இறைமார்பில் தினம்சூட்டி னாலென்ன
தேவாரத் தேனிசை தினம்பாடி னாலென்ன
போவார்தான் வருவதுண்டோ இச்சாவுப் பூமியில்சொல்
மாவீரன் போல்மார்தட் டுகிறாய்நீ மானிடனே
பூவாரம் இறைமார்பில் தினம்சூட்டி னாலென்ன
தேவாரத் தேனிசையைத் தினம்பாடி னாலென்ன ?