யாதும் ஊரே யாவரும் கேளீர்
நேரிசை ஆசிரியப்பா
தமிழனென் றுனையும் தமிழைப் பேசவே
மலேசிய உலகத் தமிழர் மாநாட்டில்
அழைத்தார் அவரறி யார்நீயும் தமிழின்
ஞானமும் இலக்கிய முமறியா மடையனென
தமிழ்நாட் டின்போதை தமிழர் அல்ல
மலேசியத் தமிழர் சனாதனம் அவிழ்த்தாய்
டேய்நிப் பாட்டுன் பேச்சை என்றும்
நாயே ஊர்போய் சேராய் என்றார்
ரோமில் ரோமனா இருவென் பதைத்தான்
யாது மூரே யாவரும் கேளிர்
என்றான் பூங்குன்றன் அறியாயோ மூடனே
இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்பக் குறள் வெண்பா
காணான் இலக்கியம் பேசான் தமிழில்
கலகசாதி காலைவாரும் கண்ணு
......