தேர்தல் வருது
கலிவிருத்தம்
சாதி இல்லையென சாதிகூட்டி வளர்ப்பகட்சி
பாதி யதில்பலமாய் பாகுபட்டு பிரிந்துநிற்பர்
சாதி யொன்றனுக்கு சாகசம்பார் நாலுகட்சி
சேதி கேளெவரும் சீட்டுகேட்டு கூடுவரே
நேரிசை ஆசிரியப்பா
பட்டியல் இனமும் பங்கு கொள்ள
பட்டியல் ரிசர்வு சீட்டென படுத்தும்
பட்டிய லினத்தார் போட்டி கட்சி
கொட்டுந் தேளாய் நாலு கட்சி
கூட்டணி அமைத்து கூட சீட்டை
கேட்டார் ராஜ தந்திர மென்றார்
லாவகமாய் லஞ்சம் தந்து ஒட்டு
வாங்க கோடி கோடி யாக
கொள்ளை செய்த கள்ளப் பணத்தை
தயாராய் வைத்து காத்திருக்கு
தரநிதி நீதி பரம்பரை திருடரே
...