விழியால் பேசாதே

விழியால் பேசாதே
×××××××××××××××××
இமைக்கின்ற நேரம்
இணைந்த நேசத்தை
ஊமை விழிகள்
உரையாடி ஒலிக்குமோ

கண்ணாடி உள்ளம்
கண்களில் தெரிந்தாலும்
கண் பேசும்
கன்னிப்பேச்சுப் புரியலையே

#அழிஞ்சுப்பழச் செவ்விதழால்
அன்பினை சொல்லாது
விழி அசைத்து
விடுகதைப் போடாதே

வண்டுப் பருகாத
வாடாத ரோசவே
கூண்டுக் கிளியாக
கூடுகட்டி வாழ்வோமே..

"யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Jul-23, 12:01 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vizhiyaal peysathey
பார்வை : 229

மேலே