தனிமை அறுக்கும் அறம்

இப்போதெல்லாம் உன் உடல் ஒத்துழைப்பதாயில்லை.
எல்லா வேலையும் வீட்டில் நீயேதான் செய்ற.
ஒத்தாசைக்கு ஆள் வச்சிக்கனு சொன்னா உனக்கா எனக்கா ன்னு சொல்லி கண்ணடிச்சி சிரிக்கிற.
என்னை புரிஞ்சுக்கற. நான் உன்னை புரிஞ்சுக்கற. உன்கிட்ட எப்போதும் எப்போதும் எனக்கு புடிச்சதெல்லாம்
இதோ எப்போ கூப்பிட்டாலும் இதே சிரிப்போடு வந்து முன்னால் நிற்பதுதான்.
எத்தனையோ கடினப்பேச்சுகளை
நாம் சேர்ந்தே சந்தித்திருக்கிறோம்.
கடந்திருக்கிறோம்.
இருந்தும் நம் இருவரிடமும் நிதானம்
தவரிடவில்லை. அதே இடத்தில் தான் இன்னமும் . உன் பக்கத்தில் இருக்கும்
காரணம் தேடியே அடிக்கடி ஊருக்கு
வந்திடறேன். உன்கிட்டயே இருக்கணும்.
நா இருந்தா உனக்கு எல்லா வேலைக்கும் துணையிருந்து செய்துக் கொடுப்பேன்தானே .
வரவா ன்னு கேட்டா பணம்‌முக்கியம் என்பதை
குழந்தைகளின் அழகைக்காட்டி
மனம் கோணாமல் உணர்த்திடற.
வாழ்வின் எத்தனை எத்தனை அடுத்தக் கட்டத்திற்கு போனாலும்
நீ உடனிருக்கணும். நீ இல்லாமல்
நம் குழந்தைகளோடு இனி நகர நினைக்கிற வாழ்க்கை நினைக்கும்போதே ஒரு நரகம்.
உலகத்தில் ஒருவருக்காக உயிரைவிட நினைப்பேனானால் அது உனக்காக மட்டுமே. என் குறும்புத் தனங்கள்
எல்லாம் ரசிக்கும்படி யார்தான் சொன்னாலும் நோட்டமிடுகிற
உன் அமைதியும் சிரிப்பும் மட்டுமே
என்னை அலாதியாய் இயங்க வைக்கிறது.
இதோ இந்த naughtiness, romanticism
Chocolaty என என்னெல்லாமோவற்றின்
வேரிளகி நீ மட்டுமே. நீயற்ற இதெதுவும்
நானில்லை. ரெண்டுநாளா உனக்கு நிறைய வேலை கெஸ்ட்.

உன் கண்கள் இறுகிக் கிடக்கின்றன உணருறேன்.
உன் கை விரல்களின் தணிவு
என் விரல் காத்து நிற்கிறது
நான் உணருறேன்.
செவி அருகி
நீ சன்னமாக பேசுவது
உயிர்வரை பாய்கிறது.
நான் என்பது
உன் ஆவி சுமந்தலையும் வெறும் கூடின்றி
வேறு யாது .
குளிரணைத்த கிணற்றுவாய்ப்போல்
உன் ஆழம் விழுங்கிய
என் உணர்வுகள்.
எதில் வேண்டுமென்றாலும் உன் முன்னால்
தோற்றுக்கொடுத்துவிடுகிறேன்
உன் இன்மையை
வெறுமையினை மட்டும் என் சமாதி செய்துவிடாதே.
நட்சத்திர கூர் முனைகள்
என் தனிமை அறுக்கும் அறம் சொல்லும்
உன் நினைவின் புன்னகை
அதன் முனைக்கொல்லும்.‌
பொலிவுள்ளவளுக்கு ஒளியூட்டும்
விழி ஜுவாலை என
உயிரின் கடைசித் தீக்கனல்
சூரியன் நான்.
எனை காலம் வென்றாலே அன்றி
ஒரு அஸ்த்தமனத்தில்
உன் சூரியன் மரிப்பதில்லை.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (30-Jul-23, 3:01 am)
பார்வை : 42

மேலே