உன் பாதம் போகும் பாதை

உன் பாதம் போகும் பாதை
🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

வண்ணத்துப்பூச்சி சிறகாக
வண்ணம் விரிக்கும்/
கண்ணிமை படபடக்க
காற்றசைவு மலராக/
கன்னியவள் மனதிலே
காதலாக உதிர்ந்திட/

உள்ளப் பாதிப்பில்
உலவுகிறேன் நினைவின்றி/
தள்ளாடும் தென்றால்
திசையறியா நகர்வதாக/
புள்ளிமான் கண்ட
புலியாகயுனை தொடர்கிறேன்/

உன் பாதம்
போகும் பாதையிலே/
முன்தெரியா அவளுடன்
முன்னேறி செல்கிறேனே/
பின்னோக்க கடிகார
முள்ளாக முன்னோக்கியே/

நீள்வட்டமடிக் கும்பூமியாக
நீள்கிறாயே பெண்ணே/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Jul-23, 5:52 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 204

மேலே