புறசித்து உள்சித்து
தாத்தா, உங்க பேரன்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்காங்க?
@@@@@@
நம்ம தமிழர்களின் வழக்கப்படி இந்திப் பேருங்களைத்தான் வைச்சிருக்காங்க. தமிழ்ப் பேருங்கள பெத்த பிள்ளைங்களுக்கு வைக்க அவுங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குது?
@@@@@@@
சரி உங்க பேரன்கள் பேருங்களச் சொல்லுங்கள் தாத்தா.
@@@@@@@@
மூத்த பையன் பேரு 'புறசித்'து. (Purajit). எதோ சாமி பேருனு சோதிடத்தில் முனைவர் பட்டம் வாங்கின லிங்கரய்யா சொன்னாராம். சின்னப் பையனுக்கு எம் பையனையே பேரு வச்சிக்கும்படி சொன்னாராம். பையன் எங்கிட்ட ஆலோசனை கேட்டான். நாஞ் சொன்னேன்:" மூத்தவன் 'புறசித்'துனா
இளையவன் பேரு 'உள்சித்'துனு இருந்தா நல்லா இருக்கும்னு" நான் சொன்னேன். எம் பையனும் மருமகளும் அந்தப் பேரை ஏத்துட்டாங்க. கேட்கறவங்கிட்ட 'உள்சித்'து இந்திப் பேருனு சொல்லுவாங்க. சனங்க எல்லாம் 'புறசித்'து, 'உள்சித்'து சுவீட்டு இந்தி நேம்சுனு பெருமையாச் சொல்லறாங்க.
@@@@@@@
பொருத்தமான பேருங்க தாத்தா.
***************************************************
Purajit = Lord Shiva

