அஞ்சு கிலோ தக்காளியா

என்னங்க பையில?
@@@@@
அடியே அன்னக்கிளி, இது பரம இரகசியமான விசயம். வெளில சொல்லக்கூடாது.
@@@@@@
என்னங்க நான் உங்க மனைவி என்கிட்டக்கூடச் சொல்லக்கூடாதா?
@@@@@@@
அஞ்சு கிலோ தக்காளி.
@@@@@@@@@@@
ஐயோ அஞ்சு கிலோவா?
@@@@@
யாராவது லஞ்சம் கொடுத்தாங்களா? அல்லது பொய் வழக்குப் போடுவேனு யாரையாவது மிரட்டி வாங்கிட்டு வந்தீங்களா?
@@@@@@@@@
இல்லடி. இல்லை. அன்பளிப்பு.
@@@@@@@@@@
ஆந்திராவிலே நூறு ஏக்கர் நிலத்தில தக்காளி விளைச்சல். பல இடங்கள்ல மொத்தம் பத்தாயிரம் ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருக்கிறாங்க. ஒரு ஏக்கருக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலே துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு பாதுகாப்பு பணி, ஆந்திரா காவலர்கள் போதாதுன்னு தமிழ்நாட்டில் இருந்து ஆயிரம் காவலர்கள், நூறு உதவி ஆய்வாளர்கள், பத்து ஆய்வாளர்கள், இரண்டு மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர்கள். இவுங்க இரண்டு பேருக்கும் ஒரு எலிகாப்டர். மேலே இருந்து கண்காணிக்க. எனது பணி நேற்று முடிந்தது. அஞ்சு கிலோ தக்காளியை நில உரிமையாளர் அன்பளிப்பா கொடுத்தாரு. அட்டா தினம் மதிய உணவு நெய் மணக்கும் தக்காளிச் சோறு ஆந்திரா காரத்தோட. சரி, சரி. இதை யாருக்கும் சொல்லிடாதே. சென்னையில இருக்கிற நம்ம உறவினர்கள் நம்ம வீட்டுக்குப் படையெடுத்து வந்தா நம்மலால சமாளிக்க முடியாது. தக்காளிச் சண்டையாலே உறவினர்கள் பகையாளிகள் ஆகிடக்கூடாது.
#########
ஆமாங்க. நீங்க சொல்லறதும் சரிதாங்க. அந்திரா தக்காளிக்கு சிந்தாபாத்து.

எழுதியவர் : மலர் (30-Jul-23, 8:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 91

மேலே