எம்மொழியும் செம்மொழியே

எம்மொழியும்
செம்மொழியே!
அம்மொழியும்
எந்தமிழ் மொழியே!

அன்பெனும் மொழியும்
வன்மொழியே!
அன்னை அவள் மொழியும்
அன்(பு) மொழியே!

ஞாலம் அவற்றில்
பழ(மை) மொழியும்
எந்தமிழே!
பைந்தமிழே!

பேதையால் தழுவி
பெதுமையால் ததும்பி
மங்கையால் தாலாட்டி
மடந்தையால் சீராட்டி

வான்புகழ் வையகமும்
செழுத்தோங்கி
வாழ்த்துதுமே
எம்மொழியையே!

அரிவையும் தெரிவையும்
எம்மொழி ஆழம் தானறிந்து
ஔவையாய் திகழ்ந்து
பேரிளமும் போற்றுதுமே!
எந்தமிழ் மொழியையே!

எம்மொழியும்
செம்மொழியே!
அம்மொழியும்
எந்தமிழ் மொழியே!

- அ.நாச்சான்

எழுதியவர் : அ.நாச்சான் (31-Jul-23, 1:14 pm)
சேர்த்தது : நாச்சான்
பார்வை : 29

மேலே