கற்கை நன்றே
கற்கை நன்றே
%%%%%%%%%%%
வறுமையெனும் இருளும்
வாழ்வில் மறையும்
கடலளவுக் கல்வியைக்
கையளவுக் கற்றிடு
கடலலையில் தத்தளிக்கும்
கப்பலையும் கரைசேர்க்கும்
கலங்கரை விளக்காய்
கவசமாகிடும் கற்றவை
விற்கும் கல்வியை
வாங்கியேக் கற்றிடு
வருங்காலக் கல்வியை
இலவசமாகத் தந்திடு
வலிதரும் பணியில்
வியர்வையைக் காசக்கி
பயிலவைக்கும் பெற்றோர்
மகிழ்ந்திடச் சான்றோனாகிடு
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

