தமிழ் தாத்தா உவேசா பிறந்த நாளில்

தமிழில் இலக்கியம் பத்துப் பாட்டையும் எட்டுத்தொகையையும்
சீவக சிந்தாமணியையும் கண்டு புதுப்பித்து உரையுடன் கொடுத்த
பேரறிஞர் சுவாமி நாத ஐயர்




பத்துப்பாட்டு மற்றும் கலிங்கத்துப் பரணி போல தமிழ் நாட்டின்
யாகப் பரணி பாடி யிருந்தும் அதற்கு சரியான உரையாரும்
செய்யாததைக் கண்டு கலங்கி இருந்த வேளையில் ஒரு
ஆதீனத்தில் அவை இருந்ததைக் கண்டுமகிழ்ந்தார். ஆனால்
இதை உரைசெய்த மகானுபவர் பெயரை எங்கும் தேடியும்
காணாது மிகவும் வருந்திக் கீழ் வரும் கட்டளைக்
கலித்துறையைப் பாடி அவரை சிறப்பித்தார்

கட்டளைக் கலித்துறை

பாரும் விசும்பும் புகழ்தக்க யாகப் பரணியின்பால்
ஆருமே சுவையில் ஆருந் தெளிய அணியுரைசெய்
சீரும் சிறப்பும் உடையோய் இருமொழி செல்வநின்றன்
பேரூர் தெரிந்திலன் என்செய்குவேன் இந்த பேதையானே

முதல்வரியில் ஒன்று நான்கு சீரில்
இரண்டில் மூன்று ஐந்தில்
மூன்றில் ஒன்று இரண்டு நான்கில் ஐந்தில்
நான்கில் ஒன்று மூன்று நான்கு ஐந்தில் மோனையின் சிறப்பினைக் காணலாம்

தமிழ் தாத்தாவே மோனை எழுதி தமிழை சிறப்பிக்க சிலர் மூக்கா அழுகிறார் ஏனோ ?
....

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-23, 9:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 14

மேலே