பூந்தளிரே மெல்லவே போ

பூந்தோட்ட நற்பூக்கள் பார்த்து ரசித்திடும்
மாந்தோப்புக் பூங்குயில் மாலைகீதம் பாடிடும்
தீந்தமிழ் நற்கவிஞன் தீட்டிடுவான் பூங்கவிதை
பூந்தளிரே மெல்லவே போ

பூந்தோட்ட நற்பூக்கள் பார்த்து ரசித்திடும்
மாந்தோப்புக் பூங்குயில் பாடிட -- பூந்தேனாம்
தீந்தமிழ் நற்கவிஞன் தீட்டிடுவான் பூங்கவிதை
பூந்தளிரே மெல்லவே போ


பூமலர்களின் நறும்தோட்டம் ரசித்திடுமுனை
மாந்தோப்பினின் குயில்நல்லிசை பாடிடும்
தீந்தமிழ்கவி ஞன்தேன்தமி ழால்பாடுவான்
பூந்தளிரே
மெல்லவே போய்நில் அந்த மரத்தடியினில்
சொல்லியதுபோல் வருவேன் நானும் அந்தியிலே

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-23, 4:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே