கோண்ட், கோண்ட்ஸ், கோண்டோ லேண்ட்

நான் செய்தியாக படித்தது :- 50 வருடங்களுக்கு முன்பு , இப்போது ஞாபகத்தில் வருகிறது - நன்றி ராகுல் காந்தி பாத யாத்திரை .


அப்போது நான் 'எட்டாவது ' வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

வீட்டிற்கு குமுதம், ஆனந்த விகடன் போன்ற வார பத்திரிக்கைகள் தான் பிரதான செய்திகளை வார, வாரம் கொண்டு சேர்க்கும் சமுதாய ஊடகங்கள்.

சிறுகதை, தொடர்கதைகள், சினிமா போக "துணுக்குகள் " சிறுவர்களை மிகவும் கவர்ந்த ஒரு பகுதியாகும்.

ஆகவே அந்த 'துணுக்குகளை' சுருக்கமாகவும், சுவையாகவும் கொண்டு சேர்க்கும் கடமை ஆசிரியர் குழுவிடம் இருந்தது.

அவைகள் பல சமயங்களில் சிந்தனைகளை எழுப்பவும் தவறியதில்லை.

அந்த காலத்தில் "விக்கி பீடியா " கிடையாது; இருந்தும் செய்திகளை தருவதில் கவனமாக இருந்தார்கள்.

வந்த செய்திகளை கவனமாகப் படித்தும், அதன் நம்பகத் தன்மை குறித்தும் அதிக விழிப்புணர்பு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இப்போது ஒரு சின்ன வரி, அல்லது அரை நொடி பேச்சு கூட கூர்ந்து கவனிக்கப்பட்டு "வைரல்" ஆக்கப்படுகிறது.

செய்தியாளர்கள் செய்திகளில் சுவாரஸ்யம் கூட்ட ஒன்று , இரண்டு முரண்களை கூறி அதன் மூலம் ஒரு விவாதத்தை எடுத்துச் செல்வது கால காலமாக இருக்கும் பத்திரிக்கை நடை முறை உத்தியே !! இதை குறை கூறுவதற்கு இல்லை; எனெனில் செய்தியும் வியாபாரமே .

அந்த காலத்தில் எதிர் வினை ஆற்ற ஒரு சிக்கல் இருந்தது. காரணம் காலம். குறைந்தது ஒரு வாரம் - அடுத்த வார இதழுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. வாசகர்களும் இருந்தார்கள்; வாதங்களும் தொடர்ந்தன.

இப்படியான வாதங்களை முடித்து வைக்க ஆசிரியர் குழு ஒரு அறிக்கையை முடிவாக பிரசுரிக்கும்.

- இதன் மூலம் எந்த ஒரு பிரிவினருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோறுகிறோம் ! என்று -

இப்போது அந்த விவாதத்திற்கு வருவோம்:-

அப்படி என்ன அந்த 50 வருட அண்டா காகசம் ; அபூர்வ சாகசம் என்று கேட்கிறீர்களா ?

இதோ,

"கோண்ட், கோண்ட்ஸ், கோண்டோ லேண்ட்"
இப்படி ஒரு வாசகம் அந்த துணுக்கில் இடம் பெற்று இருந்தது.

என்னுடைய நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் - சமிபத்தில் திரு ராகுல் காந்தி (கன்னியாக் குமரி முதல் காஷ்மீர் வரை ) தன் இந்திய நடை பயணத்தில் ஆந்திராவில் இரண்டு நாட்கள் இருந்த போது பல ஆதி குடிகளை சந்தித்துப் பேசினார் . அவர்களில் இவர்களும் அடக்கம்.

இவர்கள் 'கோண்ட்ஸ் ' இவர்கள் வசிக்கும் இடம் 'கோண்ட் லேண்ட் ' என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் மலைவாழ் குடியினர்.ஆந்திராவில் ஒங்கோல் மாவட்டத்தில் பூர்வ குடிகளாக அறிப்பட்ட ஒரு சமூகத்தினர்.

அவர்கள் எண்ணிக்கையில் 5000 க்கும் குறைவு. குழு மனப்பான்மை ஆதிக்கம் செலுத்தும்.

அவர்கள் பேசும் மொழி கோண்ட் மொழி .இதில் இந்தி, இந்துஸ்தானி . மராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளின் கூட்டு கலவை.

அவர்கள் தங்களது மொழியின் பெருமையை அறிந்து இருந்தார்கள்.

மேலும் அவர்களுடைய மொழியில் இருந்து தான் " தெலுங்கு , மராத்தி ஆகிய மொழிக் குடும்பங்கள்" உருவானது என்று கூறும் போது அவர்களின் மொழிப் பற்றை வணங்கி மகிழ்ந்தேன்.

இதில் ஆச்சரியம் என்ன என்றால் ; அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.

பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள ஒரு மொழியை கொண்டாடுவதைப் பார்க்கும் போது ஒரு பரவசம் ஏற்படுவதாக அந்த செய்தியாளர் புகழ்த்து தள்ளி இருந்தார்.

அந்த குழுவின் சார்பாஞ்ச் சொல்லும் போது :-
'எங்கள் மொழிக் குடும்பம் 5000 ஆண்டு பழமை வாய்ந்தது. நாங்கள் மலையில் வாழும் மக்கள். இயற்கையை போற்றி அதன் வளத்தை பெருக்குவதன் மூலம் நாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்ததாத கூறியபோது அந்த உண்மைக்கு இரு கரம் கூப்பி வணங்கி புலகாங்கிதம் அடைந்ததாக செய்தியாளர் மேலும் விவரித்து இருந்தார்'.

இவர்கள் அல்லவோ "கடவுளின் உண்மையான பிள்ளைகள்" .


அப்போதைய விவாதம் இவ்வாறாக தொடர்ந்தது....

எப்படி ஒரு மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கும் போது Root Language ஆக இருக்க முடியும் ?

இன்னொறு சிறப்பு - அவர்கள் தங்கள் மொழியை ஆராதனை செய்தார்கள்; மொழிதான் கலாச்சாரத்தின் ஆணி வேராக கருதினார்கள்.

இலக்கியம் , இதிகாசம் பற்றி அவர்களுக்கு தெரிந்து இருந்தது.

ராமனை " இலட்சிய புருஷனாக" போற்றினார்கள். ராவணன் ஒரு மாய சக்தி என்று நினைத்தனர்.


எது , எப்படியோ , அந்த இனம் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது .உண்மை எப்போதும் சாவது இல்லை.

சுயநிதிக் குழுக்கள் அவர்கள் சமுதாய உயர்வுக்கு வழி வகுத்து இருக்கிறது.

நெசவு அவர்களது 'அடி நாதமாக ' இருக்கிறது. விவசாயம் செய்கிறார்கள். கட்டிடத் தொழில் மற்றும் கலை நயத்துடன் கூடிய கைவினைப் பொருட்கள் பல செய்து வாழ்க்கையில் மேலும் உயர்ந்து இருக்கிறார்கள்.

இப்பெரு மக்களை நினைத்து நாம் பெருமை கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு wiki pedia


Please note : நான் என் கட்டுரையை அந்த காலத்து சிந்தனையில் எழுதி இருக்கிறேன்.

எழுதியவர் : செல்வன் ராஜன் என்கிற செல்வராஜ் ராமன் (6-Aug-23, 11:46 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
பார்வை : 36

மேலே