80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா
80' களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..
9 ஆம் திருவிழாவும் கரகாட்டமும்
9 ஆம் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக கரகாட்டம் நிகழும் .
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு ஆடல்களில் “குடக்கூத்து” என்னும் ஒருவகை ஆடல் கரக ஆடல் ஆகும் ..
இப்படியாக சங்க காலம் தொட்டு இன்று வரை கரகாட்டம் தமிழ் நாட்டின் தலை சிறந்த நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது...
மண், செம்பு, பித்தளை போன்றவைகளால் வாய்ப்புறம் குவிந்தும், அடிப்புறம் பெருத்தும் காணப்படும் குடம் “கரகம்” எனப்படும். நீர், அரிசி, மணல் போன்றவைகளால் நிரப்பப்பட்டு வாய்ப்புறத்தை மூடி அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கைகளால் பிடிக்காமல், நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.
கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு விறுவிறுப்பான அடவுகளைச் செய்வர். அவ்வாறு ஆடினாலும் தலையிலிருந்து கீழே விழாமல் சமன் செய்து கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடுபவர் எப்படி உடலை வளைத்து ஆடினாலும், அந்தக் கரகம் கீழே விழாதவாறு ஆடுவர்...
கரகம் தலையில் சுமந்து இருக்கும் பொழுது கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு நீண்ட கத்தியால் மற்றொருவர் மார்பில் வைக்கப்பட்ட வாழைக்காயை வெட்டுதல், தேங்காய் உடைத்தல், கண் இமைகளை மூடிக் கொண்டு ஊசிநூல் கோத்தல் முதலிய சிறுசிறு சாகச வேலைகளையும் செய்து காட்டுவர்.
இதுபோன்று காவடி ஆட்டம் ஆடுவார்கள்..சுடலை ஆட்டம் ஆடி வேட்டைக்கு செல்லுதல்..குறவன் குறத்தி ஆட்டம்,பகல் ஆட்டம் இப்படியாக இரவு 10.00 மணிக்கு துவங்கும் கரகாட்டம் அதிகாலை 5.30 வரை நிகழ்த்தியாக நடைபெறும்..
1980 களில் பெரும்பாலும் ஆண்களே பெண்வேடமிட்டு கரகாட்டம் ஆடினார்கள் ..சில கரகாட்ட குழுவிலே குடும்பப் பெண்களும் இடம் பெற்றனர்..
2015 க்கு பிறகு கரகாட்டக் கலை திருநங்கை திருநம்பிகள் கைக்குச் சென்றது..பண்பாடு கலந்த கரகாட்டம் செயல் இழந்து மாற்றுத் திசை நோக்கி சென்று விட்டது...
கரகாட்டம் போன்ற கலைகள் மீண்டும் குடும்பப் பெண்கள் ஆதிக்கத்திற்குள் வர வேண்டும்..கலை உயிர்ப்பு பெறவேண்டும்...
மண்சார்ந்த கலைகள் மண்ணோடு காணமால் சென்று விடக் கூடாது மண் உள்ள வரை கலையும் வாழ மேலக்கலங்கல் அம்மனை வேண்டுகிறேன்.
தொடரும்....
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்