மௌனம் அவள்மொழியாம்

விழியில் மலருடையாள் வீணைக் குரலாள்
பொழியும் நிலவினைப் போல நிறத்தாள்
மொழியில் தமிழுடையாள் மௌனமே பேசும்
குழிக்கன்னத் தில்பார் கனி

விழியில் மலருடையாள் வீணைக் குரலுடையாள்
பொழியும் நிலவினைப் போல நிறமுடையாள்
மொழியில் தமிழுடையாள் மௌனத்தில் பேசுவாள்
குழிக்கன்னத் தில்மாங் கனிகொஞ்சும் சிரிப்பினள்

விழியில் மலருடையாள் வீணைக் குரலுடையாள்
பொழியும் எழில்நிலவைப் போல நிறமுடையாள்
மொழியில் தமிழுடையாள் மௌனம் அவள்மொழியாம்
குழிக்கன் னத்தில்மாங் கனிவெண் புன்னகையாள்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-23, 2:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே