விநாயகர் துதி

வேழமுகத்தோன் விநாயகன்
ஏழைப் பங்காளன்
வேத முதலோன்
மூஷிக வாகனன்
பேதம் இல்லாதவன்
எருக்கன் மாலை
விரும்பி ஏற்பவன்
சக்தி சிவபாலன்
காத்திகேயன் கருத்தில்
நிலையாய் அமர்ந்தவன்
கோயிலிலும் இருப்பான்
உகந்தே அரசமரத்தடியிலும்
ஞானம் தருவான் செல்வமனைத்தும்
நாடிவரும் பக்தருக்கு
வரப்பிரசாதி அவனே
வித்தகன் விநாயகன்
சித்தி விநாயகன்
சீர்மிகு கணபதி
வல்லப விநாயகன்









நாடிவந்த

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Aug-23, 5:59 pm)
Tanglish : vinayagar thuthi
பார்வை : 52

மேலே