மாமா உன் மடியிலே
மாமா உன் மடியிலே
£££££££££££££££££
மஞ்சுவிரட்டு காளைதனை
பஞ்சாக பிடித்தவனே/
நெஞ்சுரம் கொண்டயுனை
மிஞ்சிட்டோர் உண்டோ/
வஞ்சிரம் மீனாக
வலையிட்டு தூக்கியே/
வஞ்சி வீழ்த்திடுவேன்
வசீகரப் பார்வையால்/
அஞ்சாக் காளையனை
அடக்கிடுவேன் பாசத்தாலே/
கொஞ்சிடவே ஆசைதான்
கொண்டுவா தாலியொன்று/
இஞ்சியிடுப்பிலே உனை
இணைத்திடுவேன் சாவியோடு/
கெஞ்சினாலும் விடாது
கெட்டியாகப் பிடித்திடுவேனே/
நெஞ்சம் வசிப்பவனே
நினைவில் வாழ்பவனே/
தஞ்சமாவேன் மாமா
உன் மடியிலே/
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்