பிறையும் மகிழ்வும்

பிறையும் மகிழ்வும்..
❤️❤️❤️❤️❤️❤️


தேய்ந்து தேய்ந்து மறைந்தே போயினும் -பெருந்துயர்

பேரிருள் தன்னில் கரைந்தே போயினும்

மகிழ்வின் பிறைகள் நம்பிக்கைக் கீற்றுகள்- மாபெரும்

வானில் ஒளியாய் வனப்பொடு முழுநிலவாய்

ஒளிரும் உலகினில் மகிழ்ச்சியைப் பொழியும்!

தேய்தலும் வளர்தலும் இயற்கையின் நியதி !

தெரிந்தே உணர்ந்தால் நிலைத்திடும் அமைதி !!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் (9-Aug-23, 7:05 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 48

மேலே