காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 13
13. பாரதி கண்ட புதுமை பெண்.
திலோத்தமா பற்றி கமிஷனர் கூறியதைக் கேட்டதும் அவள் மீதான மரியாதை மலை அளவு கூடியது.
மனதிற்குள் அவன் மனைவி ப்ரியம்வதா புன்னகையுடன் தோன்றினாள். அவளும் இந்தப் பெண் போல்தான் மற்றவர்க்கு உதவுவதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டாள்.
மற்றவர்களுக்கு உதவுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான் என்று மனதில் நினைத்து கொண்டான்.
பாரதி கண்ட புதுமை பெண்ணாக பாரதிதாசன் மனதினில் பதிந்து விட்டாள் திலோத்தமா.
அவன் மரியாதை உடன் அவளைப் பார்த்து குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்பது பற்றி விரிவாக கூறினான்.
அவள் வெகு கவனமாக கேட்டுக் கொள்வதை கவனித்து உதடுகளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
குழந்தைக்கு தேவையான சில டானிக் மற்றும் ஆகாரம் பற்றி தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
அங்கிருந்து கிளம்பிய மூவருமே வெவ்வேறு விதமான மனநிலையில் இருந்தனர்.
சட்டப்படி குழந்தையை ஹோமுக்கு அனுப்ப வேண்டும் தான் ஆனால் கமிஷனரும் உடன் இருப்பதால் இன்ஸ்பெக்டர் டென்ஷன் இல்லாமல் அமைதியாக இருந்தார்.
திலோத்தமா நன்கு அறிந்திருந்தாள் இதுவரை அவள் பார்த்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் இனி தான் அவள், அவள் உறவுகளிடம் மிகவும் அதிகமாக போராட வேண்டும் என்று நினைத்து மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டாள்.
தன்னிச்சையாக அவள் கைகள் குழந்தையை இருக்கி பிடித்தது.
கமிஷனருக்கு தன் நண்பனை எப்படி சமாளிப்பது என்று கவலையாக இருந்தது.
தன் மகளிடம் அவன் வைத்திருக்கும் அளப்பரிய அன்பை பற்றி இவர் நன்கு அறிவார். அதுதான் இவர் மனதில் தோன்றிய பயத்திற்கு காரணம்.
கமிஷனர் ஓரக்கண்ணால் திலோத்தமா வை பார்த்தார். அவள் முகத்தில் எள்ளளவும் பயம் அற்ற தன்மையை பார்த்து வியந்து போனார்.
இவர் அறிந்த திலோத்தமா இவள் இல்லை.
அவள் மிக மிக மென்மையான பயந்த
சுபாவம் கொண்ட நேர்மையான பெண்.
சிறு வயதில் இருந்தே யாராவது கஷ்டம் என்று வந்தால் அவள் மனம் இளகி விடும்.
திடீர் திடீரென்று ஏதாவது நாய் குட்டி, பூனை குட்டி என்று எதையாவது தூக்கி வந்து வைத்துக் கொண்டு பாவம் அங்கில் இந்தப் பூனை குட்டி ட்ரக் இல் அடிபட இருந்தது தெரியுமா அதான் நான் தூக்கி வந்துட்டேன் என்று கண்களை விரித்து விரித்து பார்த்துக்கொண்டு கைகளை ஆட்டியபடி அவள் பேசுவதை கேட்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அப்படியா, கஷ்டப் படுறவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும், அப்பதான் நீ குட் கேர்ள் என்று இவர் கூறும்போது தன் அரிசி பற்களைக் காட்டி அவள் சிரிக்கும்போது உலகமே மறந்து விடும் இவருக்கு.
டேய் நீ இப்படியே சொல்லி சொல்லி ஏத்தி விடு ஒரு நாள் அவள் நாய், பூனைக்கு பதிலாக ஒரு பிள்ளையை தூக்கிட்டு வந்து நிக்க போறா பார் என்று அவள் தந்தை
கூறியதும் தவறாமல் ஞாபகம் வந்து மனதை அடைத்தது.
அய்யோ.... இப்ப அதைச் சொல்லியே திட்ட போறான் என்று நினைத்துக் கொண்டார்.
அதற்கு நேர்மாறான எண்ணம் திலோத்தமா மனதில் ஓடியது.
சின்ன பிள்ளையா இருக்கும் போது இது போன்று சூழ்நிலை வந்தால் அவளுக்காக தந்தையிடம் வக்காளத்து வாங்கி பேசி எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவார் இந்த அங்கில், இப்ப இவரே என்னைத் திட்டுவது தான் தாங்க முடியவில்லை.... என்று எண்ணி மனதிற்குள் குமைந்தாள்.
அவளைப் பொருத்த வரை பாவம் இந்தக் குழந்தை, தாயும் இறந்து விட்ட இந்த நிலையில் இதை எப்படி விட முடியும். அம்மா கண்டிப்பாக சம்மதிக்க மாட்டாள் அது தெரிந்த விஷயம் தான். ஆனால் அப்பாவிடம் எப்படியும் நையம்பாடி ஒத்துக் கொள்ள வைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அப்புறம், இனிமேல் இதுபோல் பிரச்சினைகள் வரும் போது அவளை விட்டு விட்டு போகக்கூடாது என்று ரகு கிட்ட அழுத்தி சொல்லனும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு சிறு குழந்தைக்கு அவள் உதவுகிறாள் இதில் மற்ற யாவருக்கும் என்ன ஆட்சேபனை இருக்க முடியும் என்று உண்மையாகவே அவளுக்கு புரியவில்லை.
அவளைப் பொருத்த வரை உலகம் அவளைப் போலவே நேர்மையான, நியாயமான ஒன்று என்ற நினைப்பு.
மற்றபடி உலகம் நாக்கை சுழற்றி என்ன மாதிரி எல்லாம் பேசும் என்பது அவள் கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக இருந்தது.
கற்பனைக்கும் எட்டாத ஒன்றை நேரில் காண நேர்ந்த போது திலோத்தமா சுக்கு நூறாக உடைந்து தான் போனாள்.
சந்திப்போம்......
கவிபாரதீ ✍️